நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் - ரஷியாவின் முன்னாள் ஜனாதிபதி கிண்டல்
டொனால்டு டிரம்பின் செயலால், இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆட்பட்டுள்ளது. அந்நாட்டி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும், அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அரசு தப்பிவிட்டது. எல்லா வகையிலும் அது முன்பை விட வலுவடைந்துள்ளது.
அந்நாட்டின் மத தலைவரிடம் இருந்து, இதற்குமுன் வேறுபட்டோ அல்லது எதிர்ப்பு தெரிவித்தோ இருந்தவர்கள்கூட தற்போது, ஆன்மீக தலைமையை தேடி ஓடும் நிலை காணப்படுகிறது. அமெரிக்காவை டிரம்ப், மற்றொரு போரில் தள்ளியுள்ளார்.
இஸ்ரேல் - அமெரிக்காவின் நடவடிக்கைகளை உலகம் முழுவதும் உள்ள பெருமளவிலான நாடுகள் எதிர்க்கின்றன. இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் என்று கூறி உங்களுக்கு வாழ்த்துகள் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளார் ரஷியாவின் முன்னாள் ஜனாதிபதியான டிமிட்ரி மெத்வதேவ்.
Post a Comment