மரத்திற்கு தாவினார் முஷாரப்
"மரத்துக்கு உரமாவோம் ; ஊருக்கு வேராவோம்" என்ற தொனிப் பொருளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எம். எம். முஷாரப் மற்றும் அவரது தலைமையிலான பொத்துவில், காரைதீவு, இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டு சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது, மாளிகைக்காடு பாவா ரோயல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம் .எஸ் .உதுமாலெப்பை, பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதித் தலைவருமான எம்.ஐ.எம் மன்சூர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபை தலைவருமான எம். எஸ் .நழீம், கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ சி சமால்தீன், உலமாக்கள், உயர்பீட உறுப்பினர்கள்,முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment