மொசாட் உளவாளிகள் மூவருக்கு ஈரானில் மரணதண்டனை நிறைவேற்றம்
இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவருக்கு ஈரான் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.ஈரானின் தஸ்னிம் ஊடகம் இதனை தெரிவித்துள்ளது.
ஈரானிற்குள் கொலைகளை செய்வதற்கான சாதனங்களை கொண்டுவந்தவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய தஸ்னிம் ஊடகம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களை நாட்டிற்குள் கொண்டுவருவது போல கொலை செய்வதற்கான ஆயுதங்களை நாட்டிற்குள் இவர்கள் கொண்டுவந்தனர்என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை கொலை செய்வதற்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment