சிறுவர்கள் தொடர்பில், அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளை அந்தந்த அதிகாரிகள் மூலமாக கடுமையாக அமுல்படுத்துவதற்கும், அதுதொடர்பான விரிவான பரப்புரை வேலைத்திட்டத்தின் மூலம் மக்களைத் தெளிவுபடுத்துவதற்கும் தமது அமைச்சு திட்டமிட்டுள்ள வேலைத்திட்டம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் சமர்பிக்கப்பட்டுள்ளமையால் குறித்த அமைச்சுக்கு உடன்பாட்டை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
Post a Comment