நீர்கொழும்பு மாநகர சபை முதலாவது, கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள்
கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் நாம் இறுதியில் எதிர்பார்க்கும் பெறுபேறு ஒன்றே. தமது கொள்கைகளில் இருந்து கொண்டு எமது இலக்கை அடைய உதவிசெய்வீர்கள் என நம்புகிறேன் என நீர்கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் புதிய மேயர் சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாநகர சபையின் ஆரம்ப கூட்டத்தில் கன்னி உரையாற்றும் போது கூறினார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட 49 உறுப்பினர்களும் கலந்துகொண்ட இச்சபை கூட்டத்தில் சபை முதல்வர் தொடர்ந்து உரையாற்றுகையில்
பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த நாட்டை புதிய பாதையில் இட்டுச்செல்லும் யுகம் கிடைத்துள்ளது. அதனை நிர்மானிக்கும் முன்னணி உறுப்பினர்களாக நாம் 49 பேர் உள்ளோம். நீர்கொழும்பு நகரை அழகான, கவர்ச்சியான, வளமான நகரமாக அபிவிருத்தி செய்ய ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற வித்தியாசம் இன்றி முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவோம்.
நீர்கொழும்பு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் எங்களை இங்கே அனுப்பியுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை குறைத்து மதிப்பிட முடியாது.
அந்த பொறுப்பை சுமந்த நாம் கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் நாம் இறுதியில் எதிர்பார்க்கும் பெறுபேறு ஒன்றே. தமது கொள்கைகளில் இருந்து கொண்டு எமது இலக்கை அடைய உதவிசெய்வீர்கள் என நம்புகிறேன்.
சபையின் ஒழுக்க விழுமியங்களை கடைபிடியுங்கள். உறுப்பினர்களிடையே பேசும்போதும், அதிகாரிகள் உத்தியோகத்தர்களுடன் நடந்து கொள்ளும் போதும், வெளியே சென்று மக்களுடன் பலகும் வேளையிலும் ஒழுக்க விழுமியங்களை கடைபிடிப்பீர்கள் என நம்புகிறேன்.
எம்மை தெரிவு செய்து அனுப்பிய மக்களுக்கும், எம்முடன் இனைந்து வேலை செய்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் பணத்துடன் வேலை செய்கிறோம். ஊழல், மோசடி, வீன்விரயங்களில் இரகசியமாகவோ பகிரங்கமாகவோ ஈடுபடாமல் மக்கள் மனதை வெள்ளும் விதத்தில் செயல்படுங்கள்.
அப்படி யாராவது செயல்பட்டால் அதனை தடுக்கும் வல்லமை உங்களுக்கு இருக்க வேண்டும். அதனை தடுப்பதற்காக ஒத்துழையுங்கள். எமது அளவை மதிப்பிடாமல் தரத்தை மேற்கொள்ள வேண்டும். எமக்கு தேவையான விதத்தில் செயல்பட முடியாது.
பெரும்பாலானவர்கள் புதிய உறுப்பினர்களாக உள்ளனர். சட்டதிட்டங்களை விதிமுறைகளை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். இன்றிலிருந்து சட்டரீதியாக வேலை செய்வோம் என்றார்.
இங்கு பிரதி மேயர் சாமர பிரனாந்து, காமினி பிரனாந்து, சுயேச்சை உறுப்பினர்களான சஜித் மோகன், சரூஜ் சத்தார், ஒஸ்மன் தர்மசேன, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களான என். எம். நுஸ்ரி, எம்.ஏ.எம். அப்ராஸ் ஆகியோர்களும் உரையாற்றினர்.
- இஸ்மதுல் றஹுமான் -
Post a Comment