Header Ads



மோதலினால் சொத்து இழப்பு

 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், நேற்றையதினம் (06.06.2025) எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பில் 27 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.


மஸ்க்கின் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய பெடரல் கடன்கள் மற்றும் மானியங்களை நிறுத்துவதாகவும் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.


இதுவரை எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனங்கள், சுமார் 38 பில்லியன் டொலர் பெறுமதியான அரசாங்க ஒப்பந்தங்களை பெற்றுள்ளன.


அத்துடன், கடந்த ஆண்டில் மட்டும் அரசாங்கத்தின் நேரடி ஒப்பந்தங்களால், எலோன் மஸ்க், சுமார் 3.8 பில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளார்.


இந்நிலையில், ட்ரம்ப் உடனான மோதல், மஸ்க்கின் இந்த ஒப்பந்தங்களை கேள்விக்குறியாக்கியுள்ளன.

No comments

Powered by Blogger.