Header Ads



ஓமந்தை விபத்து - ஒருவர் பலி, மூவர் படுகாயம்

 


வவுனியா, ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அன்று அதிகாலை டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பில்  இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரானது யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தில் சஜ்யிதானந்த பிரபாகர குருக்கள் வயது 52 என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மனைவி பி.சீத்தாலட்சுமி(வயது - 50), மகன் பி.அக்ஸய் (வயது 27), மாமனார் சுவாமிநாதன் ஐயர் (வயது - 70) படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.