Header Ads



இலங்கை - இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க திட்டம்


இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ரூவன் ஜேவியர் அசார்   சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். 


இந்த சந்திப்பில் தூதுவர் அசார் சபாநாயகரின் நியமனம் தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இஸ்ரேலிய சபாநாயகரின் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார். 


சுற்றுலா, விவசாயம், விஞ்ஞானம், டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு மற்றும் மருத்துவத் துறைகள் உள்ளிட்ட பிரதான துறைகளில் இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 


இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை - இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிப்பதன் முக்கியத்துவத்தை தூதுவர் வலியுறுத்தினார். 


இந்தச் சந்திப்பில் பௌத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன , அதன் போதனைகள் உலக அமைதி மற்றும் சகவாழ்வை வளர்ப்பதற்கு எந்தக் காலத்துக்கும் பொருத்தமானது  எனத் தெரிவித்தார்.


இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் இலங்கைக்கான துணைத் தூதுவர் தினேஷ் ரொட்ரிகோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.