தொப்பியை எடுக்கக் குனிந்த பிர்தௌஸ் அடித்துக் கொலை
இந்தியா - பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தின் கோச்சாதாமன் வட்டாரத்தைச் சேர்ந்த கைரி பிர் பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜமாலுதீன் அவர்களின் மகன், பிர்தௌஸ் ஆலம் என்ற அஸ்ஜாத் பாபு. எப்போதும் தலையில் தொப்பியும் வைத்து புன்னகை மாறாத முகத்திற்கு சொந்தக்காரர்
7 மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் சனிக்கிழமை (24) ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தின் புளோரா செக்டர் 29 இல் அவர் தன் நண்பனைப் பார்க்க இரவு 7 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது,
சிசுலால் என்ற இந்துத்துவ பயங்கரவாதி அவரை தடுத்து நிறுத்தி, தலையில் இருந்த தொப்பியை எடுத்து கீழே வீசினான். தொப்பியை எடுக்கக் குனிந்த பிர்தௌஸை கையில் வைத்திருந்த கழியால் சிசுலால் தலையில் அடித்தான்.
மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தாலும், அவர் இறந்துவிட்டார்... இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
- Syed Ali -

Post a Comment