பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை - கடலுக்கும் செல்ல வேண்டாம்
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (30) பிற்பகல் 12.30 வரை அமுலில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோர கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு இது தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment