Header Ads



460 மில்லியன் ரூபாய் மதிப்பு போதைப் பொருளுடன், தாய்லாந்துக்காரி கட்டுநாயக்காவில் பிடிபட்டாள்


தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்த பிரித்தானிய இளம் பெண்ணொருவரால் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருள் தொகை ஒன்று சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.


இலங்கை சுங்க சேவையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது, இன்று (12) மாலை அவர் இலங்கைக்கு வந்த பின்னர் சுங்க வளாகத்தைக் கடந்து செல்ல முயற்சித்தபோது, அவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவரது பயணப் பையில் இந்த போதைப்பொருள் தொகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் மொத்த எடை 46 கிலோகிராம் எனவும், இதன் மதிப்பு சுமார் 460 மில்லியன் ரூபாய் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


சந்தேக நபரையும், போதைப்பொருள் தொகையையும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.