பாராளுமன்றத்தில் இன்று 2 பேர், பேசிக்கொண்ட விடயங்கள்
பாராளுமன்றத்தில், இன்று (20) அர்ச்சுனா இராமநாதன் உரையாற்றும் போது, அவருக்கு முன்னதாக பேசிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் உரையை கேலி, கிண்டல் செய்தார்.
தான் வழமையாக உத்வேகத்துடன் உரையாற்றுவேன். எனினும், இன்று எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. எனக்கு முன்னதாக உரையாற்றியவர் வீதிகள், பாலங்களை ”புணரமைப்பு” செய்ய போகிறாராம். ஐயா அது “புணரமைப்பு” அல்ல ”புனரமைப்பு”, ஆணும் பெண்ணும் தான் புணர முடியும் என்றார் அர்ச்சுனா இராமநாதன்.
அத்துடன், ஜெட்டியா (jetty), ஜட்டியா (jaṭṭi) என தெரியாது, அண்டர் ஜட்டி செய்ய போகிறாராம். என்னையா? எனஅர்ச்சுனா இராமநாதன்.கிண்டல் செய்தார். அது ஜட்டி அல்ல ஐயா, ஜெட்டி என தெளிவுப்படுத்தினார்.
இந்நிலையில், அர்ச்சுனா இராமநாதனின் உரைக்கு பின்னர், ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்,
ஜட்டியா ஜெட்டியா என்பது தெரியாது, ஜட்டியை கழற்றி தனது தலையில் ஜட்டியை போட்டுக் கொண்டு போகிறான். என கடுமையாக விமர்சித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பேசும் மொழியை கொச்சப்படுத்திய இவர், வசூல் மன்னன். கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளார் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஏப்ரல் (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை, ஏப்ரல் 19ஆம் திகதி விதிக்கப்பட்டது. அந்த தடைக்குப் பின்னர், அர்ச்சுனா இராமநாதன், பாராளுமன்றத்தில், இன்று (20) உரையாற்றினார்.
Post a Comment