காசாவில் நரகத்தை உருவாக்கி வரும் இஸ்ரேல், ஹமாசிற்கு எதிராக வேகமான தீர்க்கமான வெற்றியை பெற திட்டம்
இது குறித்து கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இஸ்ரேல் பாலஸ்தீனிய பகுதியிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாமல் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிககளை விடுதலை செய்வதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக காசா மீதான முற்றுகையை தீவிரப்படுத்துவதற்கான திட்டமொன்றை உருவாக்கி வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை தடுத்து நிறுத்தியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அரசாங்கம் அதற்கு அப்பாலும் சென்று காசாவில் உள்ள 2.2 மில்லியன் மக்களையும் அந்த பகுதியையும் தனிமைப்படுத்தும் திட்டமொன்றை தயாரிக்கின்றது என இஸ்ரேலிய வானொலி நிலையமான கான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அரசாங்கம் இந்த திட்டத்தினை நரகதிட்டம் என குறிப்பிடுகின்றது என இஸ்ரேலிய வானொலி தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் காசா மக்களிற்கான மின்சாரம் குடிநீர் போன்றவற்றைஇஸ்ரேல் துண்டிக்கும்,காசா மக்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லுமாறு உத்தரவிடும்.
முழுமையான யுத்தமொன்றினை ஆரம்பிப்பதற்காகவே இஸ்ரேல் உத்தரவை பிறப்பிக்கவுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினரை முழுமையான யுத்தமொன்றிற்கு தயாராகுமாறு அதன் பாதுகாப்பு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார் என வலா செய்திதளம் தெரிவித்துள்ளது.
ஹமாசிற்கு எதிராக வேகமான தீர்க்கமான வெற்றியை பெறுவதற்காக கடும் பலத்தை பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துவரும் மேஜர் ஜெனரல் எயால் ஜமீர் இஸ்ரேலிய இராணுவத்தின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். Vira

Post a Comment