Header Ads



கோவில் வளாகத்தில் நடந்த இப்தார்


இஸ்லாமோபோஃபியா  வளர்க்கும் சங்க பரிவாரங்களின் வெறுப்பு பரப்புரைகளை புறக்கணித்துவிட்டு கேரள மலபார் பிரதேசத்தில் இணக்கம் பேணும் புராதனமான இந்து கோவில்கள் ஏராளம் உண்டு.


நேற்றைய ரமலான் 2வது தினத்தில் அப்படியொரு மனித நல்லிணக்க நிகழ்ச்சி காசர்கோட்டில் நடந்தது..


நீலேஸ்வரம் அருகில் கேணமங்கலம் ஶ்ரீ பகவதி கோவில் வளாகத்தில் நடந்த இஃப்தார் சங்கமத்தில் ஏராளம் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.


பகவதி கோவில் கமிட்டி தலைவர்  பேரா.ஜெயராஜன் தலைமையிலான நிர்வாகிகள் தங்கள் சுற்றுவட்டார 13மஹல்லா நிர்வாகிகளை நேரில் சென்று அழைத்து கோவில் வளாகத்திலேயே இஃப்தார் நிகழ்ச்சி நடத்தியுள்ளதும்,  முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவு தலைவர் பாணக்காடு முனவ்வரலி ஷிகாப் தங்கள் சிறப்பு விருந்தினராக இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் மரிக்காத மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது..

Colachel Azheem

No comments

Powered by Blogger.