தென்கொரியாவில் கலிமா சொல்லி, இஸ்லாத்தை தழுவிய 17பேர்
தென்கொரியாவில் சீயோல் சென்ட்ரல் மஸ்ஜிதில் இவ்வாண்டு ரமலான் மாதத்தின் முதல் நாளில் ஆண்களும் பெண்களுமாக 17பேர் கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவியது நடந்துள்ளது..
புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகம் வாழும் தென்கொரியாவில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தென்கொரிய மக்கள் தொகையில் சுமார் 2லட்சம் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.
2019ம் ஆண்டு பிரபல பாடகர் ஜே கிம் இஸ்லாம் தழுவி தாவூத் கிம் என்ற பெயரில் தனது ரசிகர்களுக்கு இஸ்லாம் குறித்த செய்திகளை எடுத்துரைக்கும் மகத்தான பணியை செய்து வருகிறார்.
தென்கொரிய முஸ்லிம் பெடரேஷன் என்ற அமைப்பு இஸ்லாம் குறித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மாதாந்திர பாடதிட்ட வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
ரமலான் முதல் தினத்தில் கலீமா சொன்ன 17பேரும் பிப்ரவரி மாத வகுப்பில் சேர்ந்து இஸ்லாத்தை குறித்து தெரிந்து மனப்பூர்வமாக முஸ்லிமாக வாழ்வியலை துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது..
Colachel Azheem
Post a Comment