காசா தொடர்பில் அரபுத் தலைவர்களிடையே சந்திப்பு
புதனன்று, எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தா சிசி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் காசாவிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோவிடம், பாலஸ்தீனியர்களை தங்கள் மண்ணில் இருந்து வெளியேற்றுவதை ஐக்கிய அரபு அமீரகம் நிராகரிக்கிறது என்று கூறினார்.
இதற்கிடையில், எகிப்தின் ஜனாதிபதி சிசி, ஸ்பெயினின் மாட்ரிட் நகருக்கு விஜயம் செய்தபோது, காசாவில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்தவும், லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்களை முழுமையாக திரும்பப் பெறவும், காசாவை மீண்டும் கட்டியெழுப்ப உலகம் ஆதரிக்க வேண்டும், அதன் பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கூறினார்.
நாளை வியாழக்கிழமை சவூதிக்கு செல்லும் எகிப்தின் ஜனாதிபதி சிசி இளவரசர் மொஹமட் பின் சல்மானை சந்திக்கவுள்ளதுடன், காசா தொடர்பிலும் பேசவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment