காதலர் தினத்தில் வினோத, ஒப்பந்தம் செய்த தம்பதியினர்
இவர்கள் இருவரும் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு வினோத ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர்
அந்த ஒப்பந்தத்தில் கணவர், மனைவி பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவற்றில், சாப்பிடும் போது குடும்ப விடயங்களை மட்டும் விவாதிக்க வேண்டும் , வர்த்தகம்பற்றிப் பேசக் கூடாது, இனி என்னை பியூட்டி குயின், கிரிப்டோ பை என அழைப்பதை நிறுத்த வேண்டும். படுக்கை அறையில் பங்குச்சந்தை இலாப நஷ்டம்பற்றிப் பேசக் கூடாது, இரவு 9 மணிக்கு பிறகு வர்த்தகம் தொடர்பான செயலி மற்றும் காணொளிகளைப் பார்க்கக் கூடாது.
என மனைவியின் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதேபோல் கணவரும் மனைவிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருந்தார்.
அவற்றில் ,தனது தாயிடம் தனது நடத்தை குறித்து கூறுவதை நிறுத்த வேண்டும் , வாக்குவாதத்தின் போது முன்னாள் காதலிகுறித்து பேசக் கூடாது ,விலை உயர்ந்த அழகுசாதன மற்றும் பராமரிப்பு பொருட்களை வாங்கக் கூடாது, இரவு நேரங்களில் ஆன்லைன் மூலம் உணவுகள் வாங்க கூடாது, எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தங்களை மீறினால் 3 மாதங்களுக்கு துணி துவைப்பது, கழிவறையை சுத்தம் செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து சமையல் செய்வது உள்ளிட்ட வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment