Header Ads



உயிரிழந்ததாக நாடகமாடிய டேன் பிரியசாத், கட்டுநாயக்காவில் கைதானவுடன் பொலிஸாருக்கு மிரட்டல்

 


நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.


டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று காலை 6.00 மணியளவில் அவர்  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 


டுபாயில் பல மாதங்கள் வாழ்ந்து நாடு திரும்பிய இவரை பொலிஸ் விமான நிலையத்தில் கைது செய்துள்ளது. அங்கிருந்தபடி பாதாள தாதா ஒருவர் சார்பில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்தாராம்.


அவர் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


டுபாயில் வாகன விபத்தில் இறந்து போனதாக பொய் பிரசாரம் செய்து அங்கு பதுங்கியிருந்த நிலையில், நாடு திரும்பும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்ட டேன் பிரசாத், அரகல போராட்டத்தின் போது பாரிய வன்முறையில் ஈடுபட்டவர்களின் முதன்மையானவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.