Header Ads



தேங்காய் பற்றாக்குறைக்கு ஆளுநர், ஹனிப் யூசுப் மீது வீரவங்க குற்றச்சாட்டு


நாட்டில் நிலவி வரும் தேங்காய் பற்றாக்குறைக்கு மேல் மாகாண ஆளுனரது நிறுவனம் ஓர் முக்கிய காரணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  


மேல் மாகாண ஆளுனருக்கு சொந்தமான எக்ஸ்போ லங்கா நிறுவனம் தேங்காய்களை ஏற்றுமதி செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இதனால் நாட்டில் தேங்காய்களுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு தேங்காய் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் டுபாய் வங்கியொன்றில் வைப்புச் செய்யப்படுவதாகவும் அந்தப் பணம் நாட்டுக்கு கொண்டு வரப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தற்பொழுது அரிசி மட்டுமன்றி தேங்காயும் இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.