அமெரிக்க, இஸ்ரேலின் முன்மொழிவை "முட்டாள்தனம்" என நிராகரித்த அயதுல்லா அலி கமேனி
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, போரினால் அழிக்கப்பட்ட காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முன்மொழிவை "முட்டாள்தனம்" என்று நிராகரித்தார்.
பலஸ்தீன குழுவின் தலைவரான ஜியாத் அல் நகாலாவுடன் தெஹ்ரானில் நடைபெற்ற சந்திப்பின் போது கமேனி இதனைத் தெரிவித்தார்.
"காசா மற்றும் பாலஸ்தீனம் தொடர்பான அமெரிக்காவின் முட்டாள்தனமான திட்டங்கள் அல்லது வேறு சில திட்டங்கள் எங்கும் செல்லாது" என்று கமேனி கூறினார்.
" காசா மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டமும் நிறைவேறாது" என்று அவர் கூறினார், உலகளாவிய பொதுக் கருத்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.

Post a Comment