Header Ads



சட்டத்தரணி தோற்றத்தில் சென்று கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை - புதுக்கடை நீதிமன்றத்தில் பரபரப்பு


புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 


மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைதந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.