காசாவை 10 ஆண்டுகளில் கட்டியெழுப்ப $ 50 பில்லியன் தேவை - UN, EU, WB.
15 மாத இஸ்ரேலியப் போருக்குப் பிறகு காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தபட்சம் $50 பில்லியன் தேவைப்படும்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் மதிப்பீட்டில் இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டது.
இடைக்கால விரைவான சேதம் மற்றும் தேவைகள் மதிப்பீடு அடுத்த 10 ஆண்டுகளில் மீட்பு மற்றும் புனரமைப்புக்கு $53.2bn தேவை என்றும், முதல் மூன்றில் $20bn தேவை என்றும் கூறியது.

Post a Comment