Header Ads



82 கையடக்கத் தொலைபேசிகளுடன் பெண் கைது


பாணந்துறையில் உள்ள வீட்டில் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இன்று -27- அதிகாலை நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 82 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சந்தேக நபர் தனது மகனுடன் வீட்டில் வசித்து வருவதாகவும், சோதனையின் போது அவர் வீட்டில் இல்லாததால், அவர் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

No comments

Powered by Blogger.