NPP யின் அவதானத்திற்கு...
- Fauzer Mahroof -
NPP அரசாங்கத்தின் பல நியமனங்களில் , முக்கிய தவறுகள் இடம் பெறுகின்றன. விமர்சனங்களின் பின் சில மீளப் பெறப்பட்டுள்ளன. சில நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்பது மட்டுமல்ல, அவைகளும் அந்த நபர்களும் மனிதகுலத்திற்கே எதிரானவர்கள்! இவைகளை நியாயப்படுத்த எந்த அடிப்படைகளும் இல்லை!
சுகாதார , ஊடக அமைச்சின் செயலாளர் நியமனம், போர்க்குற்றமிழைத்த படை அதிகாரிகளை மேலும் பதவி உயர்த்தி வழங்கும் நியமனங்கள், மற்றும் மாவட்ட அபிவிருத்திக்கு பொறுப்பான நியமனங்களில் சிங்கள இனப் பிரதிநிதித்துவத்திற்கு முன்னுரிமை வழங்கல், பிற பிரதேசத்தவர்களை நியமித்தல் என்பன இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டி உள்ளது!
அடுத்தது, உண்மை சார்ந்த விடயம்! சபாநாயகரின் கலாநிதிப் பட்டம் தொடர்பான விடயத்தில் , பல்கலைக்கழகமே அப்படியான பட்டத்தை வழங்கவில்லை என சொன்ன பின்னும் அதனை இலகுவாக கடந்து செல்ல , அல்லது கள்ள மெளனம் காப்பது நல்லதல்ல. இது புதிய அரசாங்கத்தின் நேர்மைக்கு இழுக்கு! மேற்கு நாடுகளில் இப்படியான ஒரு விடயம் நடப்பின் அவர்களே தமது பதவிகளில் இருந்து உடன் விலகிக் கொள்வர், அல்லது விலக்கப்படுவர்! மேலுமொரு பிரதியமைச்சரின் கல்வித் தகைமை தொடர்பிலும் இப்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது!
இவைகள் தொடர்பாக பேசுவது இன ரீதியான பார்வை அல்ல, ஜனநாயகத்தினதும் , பொதுப்பணியில் இருக்க வேண்டுய அடிப்படை அணுகுமுறையினதும் வலியுறுத்தலாகும்! தவறுகள் சுட்டிக் காட்டப்படுவதுடன், அவை மீதான நேர்மையான விமர்சனம் முக்கியமானதாகும்!

Post a Comment