இஸ்லாத்தின் விழுமியங்களை மதிக்கும் முஸ்லீம் உலக லீக் - சவுதி தூதர்
கொழும்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கையில் உள்ள முஸ்லிம் உலக லீக் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் இலங்கைக்கான சவுதி தூதர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி கலந்து கொண்டார்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில்இ இலங்கையில் பாதிக்கப்பட்ட சகோதர மக்களுக்கு இந்த உதவியை வழங்கியதற்காக முஸ்லிம் உலக லீக்கிற்கு தூதுவர் நன்றி தெரிவித்தார்.
இஸ்லாத்தின் விழுமியங்களை ஒற்றுமையுடனும் இரக்கத்துடனும் மதிக்கும் முஸ்லீம் உலக லீக்கின் மனிதாபிமானச் செய்தியை மேம்படுத்துவதற்காகவே இந்த உதவி வழங்கப்படுவதாகவும், அனைவரையும் எல்லாத் தீங்குகளிலிருந்தும் காக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தூதர் தெரிவித்தார்.
Post a Comment