Header Ads



கடந்த அரசாங்கமே பொருட்களுக்கு நிலவும், தட்டுப்பாட்டை ஏற்க வேண்டும் -




அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கனுக்கான தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் நேற்று தெரிவித்துள்ளார். 


அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும், பொருட்களுக்கான விலை குறைவடையவில்லை என்றும் இன்று பலர் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர். 


அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். இது தொடர்பான தெளிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். இதற்கான பொறுப்பைக் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும். 


நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது பெரும்பாலான நெல் களஞ்சியசாலைகள் தனியாரிடமே இருந்தன. 


இந்த நிலைமையை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.