Header Ads



கற்பிட்டி - பாலாவி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு


கற்பிட்டி - பாலாவி பிரதான வீதியின் தேத்தாப்பொல பிரதேசத்தில் நேற்று (13) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.


தழுவ - கஜூவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 28 வயதுடைய இருவரும் மரணமாகியுள்ளதுடன், 22 வயதுடையவர் ஒரவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பாலாவியில் இருந்து கற்பிட்டி பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்களிலும் கற்பிட்டியில் இருந்து பாலாவி நோக்கிப் பயணித்த லொறியும் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


பாலாவி பகுதியிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , விபத்து தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

No comments

Powered by Blogger.