ஜனாதிபதி அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடதொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இணைய செய்தித்தளம் ஒன்றில் கேலிச்சித்திர ஓவியராகவும் (கார்ட்டூனிஸ்ட்), அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றிய பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி ஹோமாகம நகரில் கடத்திச் செல்லப்பட்டார்.

Post a Comment