Header Ads



சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்பு - எப்படித் தடுக்கலாம்..?


இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.


இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக காணப்படுவதாக விசேட வைத்தியர் டொக்டர் சஞ்சய் ஹெயன்துடுவ தெரிவித்துள்ளார்.


“நம் நாட்டில் சுமார் 10% பேருக்கு  சிறுநீரக நோய் உள்ளது. உண்மையில் நோய் ஏற்பட  பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த நோய்களை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். 


குறிப்பாக நம் நாட்டில் சிறுநீரக பாதிப்பை பாதிக்கும் முக்கிய காரணியாக நீரிழிவு நோய் உள்ளது.  மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது மற்றும் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உணவில் உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் அளவைக் குறைப்பதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம். குறிப்பாக

ஒரு நாளில் 3, 1/2 லீட்டர் தண்ணீர் பருகுதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடலாம்''.

No comments

Powered by Blogger.