ஹமாஸினால் இன்று விடுவிக்கப்பட்டவர்கள் நல்ல, ஆரோக்கியத்துடன் உள்ளனர் - இஸ்ரேல்
ஹமாஸினால் விடுவிக்கப்பட்டவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவையான மேகன் டேவிட் அடோம் டைரக்டர் ஜெனரல் எலி பின் இராணுவ வானொலியிடம் தெரிவித்தார்.
சிறைபிடிக்கப்பட்டவர்கள் "நல்ல மற்றும் நியாயமான" ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஆரம்ப மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய கைதிகள் காசாவில் இருந்து ரஃபா கிராசிங் வழியாக எகிப்துக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர்.

Post a Comment