முன்னாள் அதிபரும், ஆங்கில பாட ஆசிரியருமான C.S .முபாரக் காலமானார்
மெல்சிரிபுர முஸ்லிம் வித்தியாலய முன்னாள் அதிபரும், ஆங்கில பாட ஆசிரியருமான யாழ்,சோனகதெரு மானிப்பாய் வீதியை சேர்ந்தவரும் நீர்கொழும்பில் வசித்து வந்தவருமான ஓய்வுபெற்ற அதிபர் C.S .முபாரக் (பெத்தார் வீடு) அவர்கள் இன்று 24/11/2023 புத்தளத்தில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹும்மஃபிர்லஹு,வர்ஹம்ஹு.
அன்னார் மர்ஹூம்களான காதர்சாஹிப், செய்தூன் ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹூம்களான கச்சு முகம்மது, சல்மா ஆகியோரின் மருமகனும், நூருல் ஹுதாவின் கணவரும், யஸார், றோஸான் சுபியானா, பௌசான் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்
நஜாத், சலாஹுதீன், பர்ஹான் (லண்டன்) சஜீதா ஆகியோரின் மாமனாரும் ,
மர்ஹூம்களான ஜுனைதா, மக்பூலா, றம்ஸீன், நிசார், றம்சியா மற்றும் மதினா, வஸீலா, ஆரிபா, பஸுல்ஹக், நாஸர், மர்ஜூன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை காலை (25.11.2023) 8.30 புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் இடம்பெறும்.
தகவல்: பாஸில் கபூர்- லெஸ்டர்

Post a Comment