டயனாவுக்கு ஏமாற்றம் - சஜித்தின் சட்டத்தரணி பர்மான் காசிம் கூறிய விளக்கம்
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான,ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட விவகார செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்;
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுவதையும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் செயற்படுவதையும் தடுத்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அவர்களால் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை காணப்படுவதாகவும், டயனா கமகே அந்த பதவியில் இருந்து விலகியமை மறைத்துள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச அவர்களும், ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் விலகியுள்ளதாகவும் தெரிவித்து நீதிமன்றத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை இவ்விருவருக்கும் காணப்படுவதால், அந்த பதவிகளை அவர்களால் தொடர்ந்தும் வகிக்க எவ்வித தடைகளும் இல்லை என தீர்மானித்து நீதிமன்றத்தால் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் அடுத்த தவனை பெப்ரவரி 12 ஆம் திகதி இடம்பெறும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் மேலும் தெரிவித்தார்.

Post a Comment