இது போர் நிறுத்தம் இல்லை
காசாவில் பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக 4 நாட்களுக்கு போரை நிறுத்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ அறிவித்துள்ளார்.
இருப்பினும், இது போர் நிறுத்தம் இல்லை என்றும் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே என இஸ்ரேல் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘‘ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும். ஹமாஸை முழுவதுமாக அழித்து, பணயக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேலை அச்சுறுத்தும் சக்தி ஏதும் காசாவில் இல்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு.
அதேநேரம், அனைத்து பணயக் கைதிகளை திரும்ப பெறவும், இஸ்ரேலுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்கவும் மீண்டும் போர் தொடங்கும் என்று பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.

Post a Comment