Header Ads



பாம்பு தீண்டி 6 மாத குழந்தை உயிரிழப்பு


- ரீ.எல்.ஜவ்பர் கான் -


ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் இன்று அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது.


பாத்திமா புரத்தில் உள்ள தனது வீட்டில் வெற்றுத்தரையில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாதங்களேயான மேற்படி குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது


தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் பாம்பு தீண்டி இருக்கிறது. ஆனால் தாயோ காலை 7 மணி அளவில் மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு குழந்தை இறந்த நிலையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு.பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத வயதை கொண்ட ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவியுள்ளது


வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே மேற்படி பாம்பு பிடித்த வீட்டினுள் நுழைந்து குழந்தையை கொண்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது குழந்தையை விஷத்தைக் கக்கி கொலை செய்த பாம்பினை அயலவர்கள் அடித்துக் கொன்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது


காத்தான்குடி பொலிஸார் சார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.