வெளிநாட்டில் பல இன்னல்களை, அனுபவித்த பெண் நாடு திரும்பினார்
சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த இராமசந்திரன் தர்ஷனி இன்று (2023.11.22) மத்துகம – நெபட பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான இராமசந்திரன் தர்ஷனியே இவ்வாறு நாட்டை வந்தடைந்தார்.
சவூதி அரேபியாவில் பணியாற்றிய வீட்டில் துன்புறுத்தல்களுக்கு இலக்கான நிலையில், இராமசந்திரன் தர்ஷனிவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சவூதி அரேபியாவிலிருந்து குவைட் வழியாக இன்று அதிகாலை இராமசந்திரன் தர்ஷனி நாட்டை வந்தடைந்தார்.
பல்வேறு இன்னல்களை அனுபவித்த தர்ஷனி தெரிவிக்கையில், என்னை சலவை இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்து சென்று தாக்கினார்கள். கீழே தள்ளி என்னை தாக்கினார்கள்.
இரண்டு ஆணிகள் மற்றும் இரும்பு துண்டொன்றை கையில் கொடுத்து உட்கொள்ளுமாறு கூறினார்கள். இல்லையென்றால், தங்க நகைகளை திருடியதாக தெரிவித்து, பொலிஸிற்கு பிடித்து கொடுப்பதாக கூறினார்கள்.
நான் ஆணிகளை உட்கொண்டேன். ஒரு ஆணி தொண்டையில் சிக்கியது. எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.” என தெரிவித்தார்.

இந்த செய்தியில் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை இருக்க முடியாது. அந்த நாட்டு மக்கள் இலட்சக்கணக்ககாக பணம் செலவழித்து மக்களை அடிமைப்படுத்த வேண்டிய தேவை இல்லை. எனது சொந்த அனுபவத்தில் இது போன்ற பெண்கள் வௌியில் உள்ள ஆண்களுடன் கள்ளத் தொடர்புகள் ஆரம்பிக்கும் போது பிரச்சினைகள் தோன்றும். அது முதிர்ச்சி பெறும் போது சிலவேளை கைகலப்புகள் ஏற்படலாம். ஆனால் இந்தப் பெண் கூறும் கதை நூற்றுக்கு நூறு பொய்யானது என்பதை மட்டும் ஆய்வுக்காக கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த நாட்டின் பத்திரிகைத் துறையும் பெரும்பான்மையும் இது போன்ற கதைகளுக்கு தாரை வார்த்து கொழுத்தி இனவாதத்தைக்க கிளப்பி இனவெறியைத் தூண்ட தயாராக இருக்கும் நிலையில் இது போன்ற கதைகள் வெறும் வாய்க்காரனின் வாயில் இட்ட சக்கரை தான்.
ReplyDelete