மதுமாதவ கைது
இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்களில் ஒருவரான மதுமாதவ அரவிந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து மேற்கொண்டதாக மதுமாதவ அரவிந்த மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துருகிரிய அதிவேக மோட்டார் போக்குவரத்து பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
விபத்து காரணமாக மதுமாதவவின் வாகனம் சேதமடைந்துள்ளதாகவும் அரசாங்க சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடவத்தையிலிருந்து கெரவலபிட்டிய வரையில் பயணம் செய்த போது மது மாதவ அரவிந்த அரசாங்க சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Post a Comment