தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமணம் என்பது அரசியல் சாசனத்தின்படி அடிப்படை உரிமை இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
எனினும் ரேஷன் கார்டுகள், ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பான உரிமைகளை தன்பாலின தம்பதிகளுக்கு வழங்குவது தொடர்பாக குழு அமைக்க மத்திய அரசு அளித்த பரிந்துரகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தன்பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17) வழங்கியது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, நான்கு தீர்ப்புகளை வழங்கியது.

Post a Comment