Header Ads



முக்கொலை விவகாரம் - இலங்கையர்கள் 2 பேர் மலேசியாவில் சரணடைவு


மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் மலேசிய பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.


சந்தேகநபர்கள் இருவரும் இலங்கையர்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதிக்கு சொந்தமான கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து உயிரிழந்த மூன்று இலங்கையர்களின் சடலங்கள் அண்மையில் கோலாலம்பூர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.


உயிரிழந்த மூவரில் ஒருவர் வீட்டினைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் எனவும், மற்றைய இருவர் வீட்டை வாடகைக்கு குடியிருந்த இருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர்கள் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகும். இந்த நிலையில் சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில் 2 பேர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.