சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சு, இலங்கையில் முதல் முறையாக நடத்திய குர்ஆன் போட்டி (படங்கள்)
ஆண்கள் பெண்கள் என இரு பாலாருக்கும் நடத்தப்பட்ட இப்போட்டி முழுக் குர்ஆன், இருபது ஜுஸ்உகள், பத்து ஜுஸ்உகள் , ஐந்து ஜுஸ்உகள் என நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்டது, இலங்கையின் நாளா பக்கங்களிலும் இருந்த அரபு மத்ரஸாக்கள், ஹிப்ளு மத்ரஸாக்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 240 பேர் (ஆண்கள் 120, பெண்கள் 120) இன்று முவிம்பிக் ஹோடலில் நடை பெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர்.
அல்குர்ஆனில் இஜாஸா தகையைப் பெற்றிருந்த காரிகள் இப்போட்டியின் நடுவர் குழாமுக்காக முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தினால் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இப்போட்டியின் நான்கு பிரிவுகளிலும் முதல் நிலைகளைப் பெரும் போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இதன்படி ஆண்கள் பிரிவில் தேர்வு செய்யப்படும் 20 போட்டியாளர்களும் பெண்கள் பிரிவில் தேர்வு செய்யப்படும் 20 போட்டியாளர்களும் (முழுக்குர்ஆன் 5, 20 ஜுஸ்உக்கள் 5, 10 ஜுஸ்உக்கள் 5, 5 ஜுஸ்உக்கள் 5) மொத்தமாக 40 வெற்றியாளர்களும் 17.07.2023 திங்கள் அன்று சங்கிரிலா ஆடம்பர உணவகத்தில் நடைபெரறும் கௌரவிப்பு நிகழ்வில் மிகவும் பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் இலங்கை, ஸவுதி அரேபியாவின் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Post a Comment