Header Ads



35 இலட்சம் பேருக்கு மகிழ்ச்சியான தகவல்


கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் போது 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55 சதவீதம் நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அனமச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04.07.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 


இதன்போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55 சதவீதம் நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தது.


மேலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதுடன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்கனள ஆரம்பிப்பதற்கு தகுந்த சூழல் உருவாகியுள்ளது”என கூறியுள்ளார்.

1 comment:

  1. இந்த மகோடிஸின் சொந்த அஜன்டாவை செயல்படுத்த இந்த நாட்டு மக்களைப் பலிக்கடாவாக மாற்றி இந்த நாட்டுப் பிரஜைகளின் கருத்துகளுக்கு, வௌிநாட்டு ஏற்றுமதிகளை முன்வைத்து நடாத்தப்படும் தொழிற்சாலைகள் மின்சார கட்டணம் அதிகரித்தால் அவர்களால் நட்டத்தில் உற்பத்தி செய்ய முடியாது என பல தரப்புகளிலுமிருந்து வந்த கோரிக்கைகளை துச்சமாக மதித்து 200 % மின்சாரக்கட்டணத்தை அதிகரிக்க தற்போது பாரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதால் மின்சார பாவனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த நட்டத்தை ஈடு செய்ய மின்சார கட்டணக்குறைவை அமுல் நடாத்துவற்குத் திட்டமிட்டு அதற்கு பல சோடிக்கப்பட்ட கதைகளைப் புனைந்து பொதுமக்களை மீண்டும் மாடாக்கும் முயற்சிகள் தான் தொடர்கின்றதே தவிர இதனால் பொதுமக்களுக்கு எத்தகைய நன்மைகளும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.