பட்டம் வென்றது இந்தியா
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்றிரவு நடந்தது.
இந்த போட்டியில் இரு அணியினரும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடினர். இதனால், கோல் அடிக்க முடியாமல் வீரர்கள் திணறினர். இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் (1-1) போட்டி முடிவின்போது, சமநிலையில் இருந்தன.
இதனால், பெனால்டி ஷூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து ஒரு கோலை அடிக்க விடாமல் தடுத்து அணி வெற்றி பெற உதவினார்.
போட்டியில் இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது.
Post a Comment