Header Ads



சுவிட்சர்லாந்திற்கு சென்ற இலங்கையரை காணவில்லை


இலங்கையின் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் காணாமல் போயுள்ளார்.


நீளம் பாய்தலில் தேசிய சாம்பியனும், முப்பாய்ச்சல் போட்டிகளில் தேசிய சாதனையையும் நிலைநாட்டியுள்ள கிரேசன் தனஞ்சயவே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக, சென்றிருந்த வேளையில் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த போட்டித் தொடர் தனிப்பட்ட ரீதியான அழைப்பிதழின் அடிப்படையில் நடைபெற்றுள்ளதாகவும், இதற்கும் தேசிய மெய்வல்லுனர் அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால், சில விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் போட்டிகளுக்காக செல்லும் போது, தப்பிச்சென்று அகதி அந்தஸ்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தனஞ்சய காணாமல் போன விவகாரம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.


No comments

Powered by Blogger.