Header Ads



தென் கொரியாவில் இலங்கையர்களின் மனிதாபிமானச் செயல்


இலங்கையை சேர்ந்த இளைஞர் குழுவொன்று கொரிய பிரஜை ஒருவரின் உயிரை காப்பாற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


இலங்கையை சேர்ந்த இளைஞர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


கொரியாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவரின் சிகிச்சைக்காக பணம் திரட்டும் நோக்கில் கிரிக்கெட் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தென்கொரியாவின் நோக்ஸான் மைதானத்தில் இலங்கை தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போட்டியின் போது, ​​அருகில் நின்ற லொறியில் கைத்தொழில் வேலைக்காக வந்த கொரியர் ஒருவரின் தலை திடீரென லொறியின் முன்பகுதியில் சிக்கியுள்ளது.


இதன்போது விரைந்து செயற்பட்ட இலங்கையர்கள், கொரிய அவசர சேவையுடன் இணைந்து விபத்தில் சிக்கிய கொரியரின் உயிரை காப்பாற்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது.


இவ்வாறு கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் கொரிய பிரஜையை மீட்ட இலங்கையர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். Twin

No comments

Powered by Blogger.