இலங்கையில் ஓமான் தூதரகத்தின் முன்மாதிரியான செயற்பாடு
ஓமான் நாட்டின் வெளிநாட்டு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இலங்கைக்கான ஓமான் நாட்டின் துாதுவர் அஹமட் அலி செய்யட் அல் ராசீட் தலைமையில் இரத்ததான நிகழ்வு
நாரேகேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்ததான நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஓமான் நாட்டின் கொழும்பு துாதுவர் அலுவலகத்தின் கடமையாற்றும் உள்ளுர் வெளிநாட்டு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
உலக குருதி நன்கொடையாளர் தினம் 14.06.2023 முன்னிட்டு இவ் இரத்த தானம் நிகழ்வு நாரேகேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்ததான நிலையத்தில் பணிப்பாளர் டொக்டர் லக்ஸ்மன் எதிரிசிங்க தலைமையில் நடைபெற்றது.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment