Header Ads



பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்


இபலோகம தம்பெலஸ்ஸாகம பிரதேசத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு பாடசாலை மாணவி ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


குறித்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இரு மாணவர்களும் , மாணவியும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மரதன்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரையும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Oruvan

No comments

Powered by Blogger.