Header Ads



இன்றைய தங்கத்தின் நிலவரம்


நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.


இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்து வந்தநிலையில், இன்றையதினம் சற்று அதிகரித்துள்ளது.


இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 647,221 ரூபாவாக காணப்படுகின்றது.


இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.


எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,840 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,940 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,990 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

No comments

Powered by Blogger.