Header Ads



தேசிய மரபுரிமை சின்னமாக மாற்றப்படும் இலங்கையின் முக்கிய பகுதி


சுற்றுலா பயணிகளை பெருமளவில் கவரும் இலங்கையின் பிரசித்திபெற்ற, இடங்களில் ஒன்றான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தினை, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.


குறித்த பாலத்தை பாதுகாப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


இந்த பாலம் பதுளை மாவட்டத்தின் தெமோதரை பகுதியில் அமைந்துள்ளது.


கொழும்பிலிருந்து பதுளை வரை செல்லும் ரயில் இந்த பலத்தினை கடந்து தான் செல்கிறது.


இந்த பாலம் பிரித்தானியர் ஆட்சியின் போது கட்டப்பட்டதுடன், நூறு ஆண்டுகள் பழைமையான வரலாறும் இதற்கு உண்டு.


வரலாற்று சிறப்புமிக்க இந்த பாலமே தற்போது தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.