Header Ads



"இறந்து மிதக்கும் மீன்களை எடுத்துச்சென்று சமைத்து சாப்பிட வேண்டாம்"


- பி.கேதீஸ் -


கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் அதிகளவான  மீன்கள் திடீரென உயிரிழந்து இன்று (17) காலை மிதந்ததாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


 ஆக்ரா ஓயாவிலுள்ள நீர்  மாசடைந்துள்ளதாகவும், பல்வேறு கால்வாய்களிலிருந்து வெளியேறும் அசுத்தமான நீர், ஆக்ரா ஓயாவில் சேர்வதாலும், மீன்கள் இறந்திருக்கலாமென அச்சம் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில், இறந்த மீன்களை சிலர் பிடித்து உணவுக்காக எடுத்துச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது. ஆக்ரா ஓயா மாதத்தில்  ஒரு முறை கறுப்பு நிறத்தில்   காணப்படுவதாக மலையக சுற்றாடல் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, இறந்து மிதக்கும் மீன்களை பிடித்துச் சென்று சமைத்து சாப்பிட வேண்டாம் என்றும், முடியுமானால் ஆற்றில் இருந்து அகற்றி புதைத்துவிட வேண்டும் என்றும் சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.