Header Ads



"நூர் ஜெஹானுக்குப் பதிலாக, இலங்கை யானைகளை பாகிஸ்தானுக்கு வழங்காதே"


பாகிஸ்தானுக்கு இரண்டு பெண் யானைகளை இலங்கை அன்பளிப்பாக வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த வாரம் கராச்சி மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்த ஆப்பிரிக்க யானையான நூர் ஜெஹானுக்குப் பதிலாக, பாகிஸ்தானுக்கு இலங்கை இரண்டு பெண் யானைகளை பரிசாக வழங்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


முன்னதாக இந்த யானைகளில் ஒன்று, கராச்சிக்கு கொண்டு செல்லப்படும், மற்றொன்று லாகூர் அனுப்பப்படும் என்று இலங்கையின் தூதரக அதிகாரி யாசின் ஜோயா தெரிவித்திருந்தார்.


எனினும் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தானில் உள்ள விலங்கு பிரியர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இலங்கையின் இந்த முடிவு குறித்து அனௌஷி அஷ்ரப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


தொலைக்காட்சி தொகுப்பாளரும் சமூக ஆர்வலருமான அனௌஷி அஷ்ரப், தனது சமூக ஊடக இடுகைகளில், ‘கடத்தல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.


யானைகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நகர்த்துவது கொடூரமானது, ஏனெனில் அவற்றுக்கு சிறை வாழ்க்கை வேண்டியதில்லை என்று அஷ்ரப் கூறியுள்ளார். இதேவேளை, பாகிஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்காவின் நிலைமைகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இலங்கையின் யானைகள் அனுப்பப்படுமானால், அவை தங்களுக்குத் தேவையான பராமரிப்பைப் பெறாது, சிறிய குடியிருப்புகளில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.