Header Ads



8 வீதமாகவுள்ள முஸ்லிம்களுக்கு, 3 வீதமளவிலே காணிகள் உள்ளன - ரணிலுடன் பயணிப்பது குறித்து அதாவின் விளக்கம்


சிறுபான்மை சமூகங்களின் இருப்புக்களை உத்தரவாதப்படுத்தும் வகையில் சிறந்த காணிக் கொள்கைகள் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் தொடர்ந்து


பயணிப்பதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ,எல்,எம்,அதாஉல்லா தெரிவித்தார்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கட்சியின் தலைமையக மான கிழக்குவாசலில் இந்நிகழ்வில் உரையாற்றிய அதாஉல்லா எம்,பி,


சமூகங்களின் இருப்புக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் காணிக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.தரிசு நிலங்கள்,அரச காணிகள் மற்றும் இயற்கை வளங்களை எழுமாந்தமாக எவரும் உரிமை கோர முடியாது.இவ்வாறு கோருவதால்தான், இருப்புக்கள்,மத அடையாளங்கள் மற்றும் வாழிடத் தொன்மைகள் ஆபத்துக்குள்ளாகின்றன.இது குறித்து தேசிய காங்கிரஸ் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளது.


ஆபத்தான ஒரு கட்டத்தலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க,சமூகங்களின் இருப்புக்களையும் பாதுகாப்பார்.இந்த நம்பிக்கை எமது கட்சிக்கு உள்ளது. காணி உரிமைகள் மற்றும் உரித்துக்கள் தெளிவாக உள்ள நிலையில் எவரும்,எவரையும் அச்சுறுத்தவோ அல்லது நிலங்களை அபகரிக்கவோ முடியாது.இதற்காகவே,தௌிவான காணிக் கொள்கை உருவாக்கப்படவுள்ளது.எல்லைகளைப் பற்றி எமக்குப் பிரச்சினையில்லை.இனங்களின் வீதாசாரத்துக்கு ஏற்ப காணிகள் பங்கிடப்படல் வேண்டும்.


எட்டு வீதமாகவுள்ள முஸ்லிம்களுக்கு மூன்று வீதமளவிலே காணிகள் உள்ளன.இதுபோன்றுதான் சகோதர சமூகங்களின் நிலைமைகளும்.சமூகங்களின் ஆதியடையாளங்களைப் பாதுகாக்கும் பயணத்தில் தேசிய காங்கிரஸ் என்றும் ஜனாதிபதியுடன் பயணிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


ஏ.ஜீ.எம். தௌபீக்

No comments

Powered by Blogger.